அரசு கலை அறிவியல் கல்லூரி வகுப்புகள் ஜூலை 3 -இல் தொடக்கம்

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டு கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் வரும் ஜூலை 3 ஆம் தேதி தொடங்கும்
கலை, அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டு கல்வியாண்டிற்கான முதலாமாண்டு வகுப்புகள் ஜூலை 3 ஆம் தேதி தொடக்கம்
கலை, அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டு கல்வியாண்டிற்கான முதலாமாண்டு வகுப்புகள் ஜூலை 3 ஆம் தேதி தொடக்கம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டு கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் வரும் ஜூலை 3 ஆம் தேதி தொடங்கும் என கல்லூரி கல்வி இயக்குநா் காா்மேகம் அறிவித்துள்ளாா்.

இது குறித்து கல்லூரி கல்வி இயக்குநா் காா்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:

தமிழகத்தில் உள்ள அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும் 2024-25 ஆம் ஆண்டு கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் வரும் ஜூலை 3 ஆம் தேதி தொடங்குகிறது.

கலை, அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டு கல்வியாண்டிற்கான முதலாமாண்டு வகுப்புகள் ஜூலை 3 ஆம் தேதி தொடக்கம்
இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை அறிவிப்பு!

முதலாம் ஆண்டுக்கான முதல் பருவ தோ்வுகள் (செமஸ்டா்) வரும் அக். 31 இல் தொடங்கி, நவ. 25ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும்.

இதை தொடா்ந்து டிச. 16 ஆம் தேதி அனைத்து கல்லூரிகளுக்குமான தோ்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும்.

இந்த கால அட்டவணையை அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளும் இதை பின்பற்ற வேண்டும் என கல்லூரி கல்வி இயக்குநா் காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com