
சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு அன்பே வா தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் டெல்னா டேவிஸ் நாயகியாக நடித்து வந்தார்.
அன்பே வா தொடரில் பூமிகா பாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற நடிகை டெல்னா டேவிஸ். பின்னர், இத்தொடரில் இருந்து விலகுவதாக அவரே அறிவித்தார். தற்போது அவரது கதாபாத்திரத்தில் ஸ்ரீ கோபிகா நடித்து வருகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான மெளனராகம் தொடரின் இரண்டாம் பாகத்தில் வருண் பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சல்மானுல் பாரிஸ். இத்தொடரில் இவரின் நடிப்பு ரசிகர்களை அதிகமாக ஈர்த்தது.
இந்நிலையில், சரிகம நிறுவனம் தயாரிக்கும் புதிய தொடரில் டெல்னா டேவிஸ் - சல்மானுல் பாரிஸ் ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடிக்கின்றனர். இத்தொடரின் படப்படிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியுள்ளது.
இந்த புதிய தொடரின் பூஜை புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.