தனுஷின் புதிய படம் 'குபேரா'

தனுஷின் புதிய படம் 'குபேரா'
Updated on
1 min read

தனுஷி புதிய படத்திற்கு குபேரா என தலைப்பிடப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான படம் கேப்டன் மில்லர். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் குறைவைக்கவில்லை. இதற்கிடையே தனுஷ் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அதில் தனது 50-வது படமான ராயன் என்கிற படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்த நிலையில் தனுஷின் - 51வது படத்தை சேகர் கமூலா இயக்கி வருகிறார். இதில் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பான் இந்தியப் படமாக உருவாகிறது. இப்படத்தின் பெயர் மற்றும் முதல் தோற்றப் போஸ்டர் நாளை(மார்ச்.8) மாலை 4.05 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

ஆனால் படத்தின் தலைப்பை சற்று தாமதமாக படக்குழு இன்று மாலை வெளியிட்டது. அதன்படி தனுஷின் 51வது படத்திற்கு குபேரா என தலைப்பிடப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பு அறிவிப்போடு விடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. மாஸாக அமைந்துள்ள படத்தின் தலைப்பை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com