ஐபிஎல் தொடரில் விளையாடாதது ஏமாற்றமளிக்கவில்லை: முஷீர் கான்

ஐபிஎல் தொடரில் விளையாடாதது ஏமாற்றமளிக்கவில்லை என முஷீர் கான் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் விளையாடாதது ஏமாற்றமளிக்கவில்லை: முஷீர் கான்

ஐபிஎல் தொடரில் விளையாடாதது ஏமாற்றமளிக்கவில்லை என முஷீர் கான் தெரிவித்துள்ளார்.

19 வயதாகும் முஷீர் கான் ரஞ்சி கோப்பையில் மும்பை அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரஞ்சி இறுதிப்போட்டியில் மும்பை அணிக்காக சதமடித்த இளம் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். ரஞ்சி இறுதிப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் முஷீர் கான் 136 ரன்கள் எடுத்தார்.

ஐபிஎல் தொடரில் விளையாடாதது ஏமாற்றமளிக்கவில்லை: முஷீர் கான்
ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் பிரபல தென்னாப்பிரிக்க வீரர்!

இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் விளையாடாதது ஏமாற்றமளிக்கவில்லை என முஷீர் கான் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடரில் எனது பெயர் இல்லை. ஆனால், எனக்கு அது ஏமாற்றமளிக்கவில்லை. என்னுடைய அப்பா என்னை டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் எனக் கூறுவார். விரைவில் ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடுவேன். அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்குத் தயாராவதற்கு எனக்கு நேரம் கிடைத்துள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் டி20 போட்டி குறித்து நன்றாக புரிந்து கொள்வேன். டி20 போட்டிகளில் எப்படி விளையாட வேண்டும் என்ற நுணுக்கங்களையும் கற்றுக் கொள்வேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com