குக் வித் கோமாளி -5 தொடக்கம்! கோமாளிகள் யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகளாக பங்கேற்கவுள்ளவர்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.
குக் வித் கோமாளி -5 தொடக்கம்! கோமாளிகள் யார் தெரியுமா?
Published on
Updated on
1 min read

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகளாக பங்கேற்கவுள்ளவர்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் முதன்மையானது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி கடந்த 4 சீசன்களாகவும் பலதரப்பட்ட மக்களைக் கவர்ந்தது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு, பலர் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் அதிக எண்ணிக்கையிலான வாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர்.

சமையல் கலையின் கைதேர்ந்தவர்களைத் தேர்வு செய்யும் இந்த நிகழ்ச்சி, கோமாளிகள் மூலம் மிகவும் கலகலப்பாக கொண்டு செல்லப்படுகிறது. இதனால், இந்த நிகழ்ச்சிக்கு அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் உள்ளனர்.

கடந்த 4 சீசன்களில் நடுவராக பங்கேற்ற சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் இந்நிகழ்ச்சியில் இருந்து விலகியதாக அறிவித்தார். அவருக்கு பதிலாக சமையல் கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜ் கலந்துகொள்கிறார். இவர் நட்சத்திரங்களின் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு சமையல் செய்பவர். சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி இரவு விருந்து நிகழ்ச்சிக்கும் இவரே சமையல் ஒப்பந்ததாரர்.

குக் வித் கோமாளி -5 தொடக்கம்! கோமாளிகள் யார் தெரியுமா?
இழப்பிலிருந்து மீண்டு சீரியல் பயணத்தை தொடங்கிய நடிகை!

இதனிடையே குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கோமாளிகள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில், கடந்த சீசன்களில் கோமாளிகளாகப் பங்கேற்ற, புகழ், சுனிதா, குரேஷி, மோனிஷா உள்ளிட்டோர் இந்த சீசனிலும் கோமாளிகளாகத் தொடருகின்றனர்.

மேலும், இந்தப் பட்டியலில் புதிதாக, விஜய் டிவி புகழ் ராமர், பிக்பாஸ் புகழ் கூல் சுரேஷ், காத்துக் கருப்பு கலை, சமூகவலைதளத்தில் நாற்காலிகள் விற்று பிரபலமான சிறுவன் சோஃபா ரசூல் ஆகியோர் இந்த சீசனில் கோமாளியாக பங்கேற்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com