இழப்பிலிருந்து மீண்டு சீரியல் பயணத்தை தொடங்கிய நடிகை!
சன் தொலைக்காட்சியில் திருமுருகன் இயக்கத்தில் ஒளிபரப்பான நாதஸ்வரம் தொடரில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றவர் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா. நாதஸ்வரம் தொடரில் கோபி கதாபாத்திரத்தின் நான்கு தங்கைகளில் ஒருவராக இவர் நடித்திருப்பார்.
அதனைத் தொடர்ந்து வாணி ராணி, கல்யாண பரிசு, பொன்னூஞ்சல் உள்ளிட்ட தொடர்களிலும், சில திரைப்படங்களிலும் ஸ்ருதி நடித்துள்ளார்.
2022ஆம் ஆண்டு மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தை வென்ற அரவிந்த் சேகர் என்பவரை ஸ்ருதி திருமணம் செய்துகொண்டார். திருமணம் நடைபெற்று ஓராண்டே ஆன நிலையில், அரவிந்த் சேகர் மாரடைப்பு காரணமாக காலமானர்.
கணவர் இழப்பிற்குப் பிறகு எந்த தொடரிலும் நடிக்காமல் ஸ்ருதி, தற்போது புதிய தொடரொன்றில் நடிக்க தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில், ஸ்ருதி சண்முகப்பிரியா சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதிய தொடரான லட்சுமி தொடரில் இணைந்துள்ளார். இத்தொடரில் விஜி பாத்திரத்திரல் நடிக்கிறார்.
இது குறித்த புகைப்படங்களை ஸ்ருதி சண்முகப்பிரியா இன்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.