விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சுட்டும் விழி சுடரே தொடரில் பாக்கியலட்சுமி தொடரில் நடித்து கவனம் பெற்ற நடிகர் விகாஷ் சம்பத் இணைந்துள்ளார்.
பாரதி கண்ணம்மா தொடரில் நடித்ததன் மூலம் மக்களிடையே பிரபலமான நடிகை வினுஷா தேவி, இந்தத் தொடரில் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார்.
வீனஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிக்கும் இந்தத் தொடரில் மற்றொரு பிரதான பாத்திரத்தில் நடிகர் யுவன் மயில்சாமி நடிக்கிறார்.
சிறையில் இருந்து பெண் குழந்தையை வளர்க்க, வினுஷா எதிர்கொள்ளும் சவால்களை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது. வினுஷா தேவியின் மகளாக பேபி தன்ஷிகா குழந்தை நட்சத்திரமாக நடிக்கிறார்.
தெலுங்கு மொழியில் பெரும் வரவேற்பைப் பெற்ற சின்னி என்ற தொடரின் மறு உருவாக்கமாக சுட்டும் விழி சுடரே தொடர் எடுக்கப்படுகிறது.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகும் சுட்டும் விழி சுடரே தொடரில், முக்கிய பாத்திரத்தில் நடிகர் விகாஷ் சம்பத் நடிக்கிறார்.
யார் இந்த விகாஷ் சம்பத்?
விஜய் தொலைக்காட்சியில் 2020 ஜூலை முதல் 2025 ஆகஸ்ட் வரை 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பான பாக்கியலட்சுமி தொடரில் செழியன் பாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றவர் நடிகர் விகாஷ் சம்பத்.
இவர் பெண்ணுக்கு தங்க மனசு, ராஜபார்வை, அண்ணா உள்ளிட்ட தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
தற்போது, அய்யனார் துணை தொடரில் நடிகர் விகாஷ் சம்பத், ராகவ் பாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
Actor Vikash Sampath, who gained attention for his role in the series Bhagyalakshmi, has joined the series Suttum Vizhi Sutare, which will be aired on Vijay TV.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆனந்த ராகம் சீரியல் நாயகியின் புதிய தொடர்! சொக்கத் தங்கம்!

இன்று முதல் ஒளிபரப்பாகும் தாய் மாமன் சீரியல்! தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

தெலுங்கு தொடரில் நாயகியாகும் தமிழ் சீரியல் நடிகை!

பாரிஜாதம் தொடரில் இணையும் ஆடுகளம் நடிகர்!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




