ரம்ஜான் பண்டிகை: தேர்வு தேதி மாற்றம்

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 4 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான அறிவியல், சமூக அறிவியல் பாடத் தேர்வுகளுக்கான தேதியை மாற்றம் செய்து தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ரம்ஜான் பண்டிகை: தேர்வு தேதி மாற்றம்

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் 4 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான அறிவியல், சமூக அறிவியல் பாடத் தேர்வுகளுக்கான தேதியை மாற்றம் செய்து தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான ஆண்டுத் தேர்வு மற்றும் மூன்றாம் பருவத் தேர்வு ஏப்ரல் 18 முதல் 30 ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று ஆண்டு அட்டவணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து தேர்தலுக்கு முன்பாக பள்ளி தேர்வுகளை நடத்தி முடித்திட தமிழக அரசு முடிவு செய்தது.

இதனைத்தொடர்ந்து புதிய தேர்வுக் கால அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டது. அதன்படி, 1 முதல் 9 ஆம் வகுப்புகள் வரை 2023-24 ஆம் கல்வி ஆண்டுக்கான ஆண்டு இறுதி தேர்வுகள் ஏப்ரல் 2 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறும். ஏப்ரல் 13 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ரம்ஜான் பண்டிகை: தேர்வு தேதி மாற்றம்
சேலம்: நடைப்பயிற்சியில் டி.எம். செல்வகணபதிக்கு முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

இந்த நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்து தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, 4 வகுப்பு முதல் 9 ஆம் வகுப்புகளுக்கா அறிவியல், சமூக அறிவியல் தேர்வுகளுக்கான தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 10 ஆம் தேதி நடைபெறவிருந்த அறிவியல் தேர்வு ஏப்ரல் 22 ஆம் தேதிக்கும், ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறவிருந்த சமூக அறிவியல் தேர்வு ஏப்ரல் 23 ஆம் தேதிக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ள தமிழக

பள்ளிக்கல்வித்துறை, அதன்படி தேர்வுகளை நடத்திட அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com