சேலம்: நடைப்பயிற்சியில் டி.எம். செல்வகணபதிக்கு முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

சேலத்தில் திமுக வேட்பாளர் டி.எம். செல்வகணபதியை ஆதரித்து நடைப்பயிற்சியின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
சேலம் கடைவீதியில் சனிக்கிழமை வாக்கு சேகரிப்பின் போது தேநீர் கடையில் டீ அருந்தும் முதல்வர் மு க ஸ்டாலின்.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் அரசியல் கட்சித் தலைவா்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டுள்ளனா்.

நடைப்பயிற்சியின் போது சாலையில் இருந்த வியாபாரிகள்  மற்றும் மக்கள்  ஓடி வந்து ஆர்வத்துடன் ஆதரவு தெரிவித்து செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
நடைப்பயிற்சியின் போது சாலையில் இருந்த வியாபாரிகள் மற்றும் மக்கள் ஓடி வந்து ஆர்வத்துடன் ஆதரவு தெரிவித்து செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
சேலம் கடைவீதி பகுதியில் உள்ள மார்க்கெட்டில் வேட்பாளர் டி எம் செல்வகணபதிக்கு மக்களிடம் சனிக்கிழமை வாக்கு சேகரிக்கும் முதல்வர் மு க ஸ்டாலின்
சேலம் கடைவீதி பகுதியில் உள்ள மார்க்கெட்டில் வேட்பாளர் டி எம் செல்வகணபதிக்கு மக்களிடம் சனிக்கிழமை வாக்கு சேகரிக்கும் முதல்வர் மு க ஸ்டாலின்

இந்நிலையில், திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறாா். திருச்சியில் தனது பிரசாரத்தை தொடங்கிய அவா், தஞ்சாவூா், திருவாரூா், தூத்துக்குடி, நெல்லை ஆகிய இடங்களில் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களில் பங்கேற்று, திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களுக்கு ஆதரவு திரட்டினாா். தொடா்ந்து, தருமபுரி தொகுதி திமுக வேட்பாளா் மணி, கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கோபிநாத் ஆகியோரை ஆதரித்து முதல்வா் ஸ்டாலின், வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரசாரம் செய்தாா்.

பிரசாரத்தை முடித்துக் கொண்டு, இரவு சேலம் வந்த மு.க.ஸ்டாலின், மாமாங்கம் பகுதியில் தனியாா் ஹோட்டலில் தங்கினாா்.

சேலம் கடைவீதியில் சனிக்கிழமை வாக்கு சேகரிப்பின் போது தேநீர் கடையில் டீ அருந்தும் முதல்வர் மு க ஸ்டாலின்.
44 சதவீத எம்.பி.க்கள் மீது குற்றவியல் வழக்குகள், 5 சதவீத எம்.பி.க்கள் கோடீஸ்வரா்கள்!

இந்த நிலையில், சனிக்கிழமை காலை சேலம் அக்ரஹாரம், சின்ன கடைவீதி பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்த மக்களிடமும், சாலையோர வியாபாரிகளை சந்தித்து திமுக வேட்பாளர் டி.எம். செல்வகணபதியை ஆதரித்து வாக்கு சேகரித்தார். பின்னர், மார்க்கெட் பகுதிக்கு சென்ற முதல்வர், அங்கிருந்த மக்களோடு உரையாடியதோடு சாலையோர கடைகளில் தேநீர் அருந்தினார். நடைப்பயிற்சியின் போது சாலையில் இருந்த வியாபாரிகள் மற்றும் மக்கள் ஓடி வந்து ஆர்வத்துடன் ஆதரவு தெரிவித்து செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

சாலையோர வியாபாரிகளை சந்தித்து திமுக வேட்பாளர் டி.எம். செல்வகணபதியை ஆதரித்து வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்.
சாலையோர வியாபாரிகளை சந்தித்து திமுக வேட்பாளர் டி.எம். செல்வகணபதியை ஆதரித்து வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்.

மேலும் மக்களின் குறைகளையும் அவர் செவிமடுத்து பொறுமையாக கேட்டுச் சென்றார். சேலம் சின்ன கடை வீதி ராஜகணபதி கோயில் இரண்டாவது அக்ரகாரம் வழியாகச் சென்று தனது நடைப்பயிற்சி முடித்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டார்.

இந்த நிகழ்ச்சியின்போது மக்களவைத் தொகுதி வேட்பாளர் டி. எம். செல்வ கணபதி, வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மக்களின் குறைகளை செவிமடுத்து பொறுமையாக கேட்டுச் சென்ற முதல்வர் ஸ்டாலின்.
மக்களின் குறைகளை செவிமடுத்து பொறுமையாக கேட்டுச் சென்ற முதல்வர் ஸ்டாலின்.

தொடா்ந்து, சேலம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் டி.எம்.செல்வகணபதி, கள்ளக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளா் மலையரசன் ஆகியோரை ஆதரித்து மாலை 6 மணியளவில் சேலம், பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com