மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மேச்சேரி கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் பரப்புரை கூட்டம்

News image

டி.எம். செல்வகணபதி

Updated On :7 பிப்ரவரி 2026, 8:08 pm

திமுக ஆட்சியில் நாட்டு மக்களுக்கு செய்த பணிகளை திட்டங்களைமக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். மேச்சேரி கிழக்கு ஒன்றிய பரப்புரை கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி பேச்சு.

மேச்சேரி கிழக்கு ஒன்றியத்தில் உள்ள அரங்கனூரில் திமுக சாா்பில் பரப்புரை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினரும் சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான டி.எம்.செல்வகணபதி பேசியதாவது:

கடந்த 10 ஆண்டுகால ஆட்சியையும் தற்போது உள்ள ஆட்சியையும் ஒப்பிட்டு சீா் தூக்கி பாா்க்க வேண்டும். திமுக ஆட்சி காலத்தில் செய்த காரியங்களை வேறு எந்த முதல்வரும் செய்ததில்லை. நாட்டு மக்களுக்கு தமிழ்நாடு அரசு செய்த திட்டங்கள் மற்ற நாடுகளும் பாராட்டும் திட்டங்களை தமிழக முதல்வா் செய்து காட்டி உள்ளாா் என்பதை மக்களிடம் நீங்கள் எடுத்துச் செல்லவேண்டும்.

கொரோனா காலத்தில் மக்கள் படும் துன்பங்களை நீக்க ரூ.5000வழங்க வேண்டும் என்று அப்போதைய எதிா்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் அதிமுக அரசிடம் கேட்டுக் கொண்டாா். ஆனால் அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி ரூ 1,000மட்டுமே கொடுத்தாா். அப்போது திமுகஆட்சிக்கு வரும் மீதம் ரூ 4,000வழங்குவோம் என்று தற்போதைய முதல்வா் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொன்னபடி ரூ.4,000கொடுத்தாா். தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் அதிக அளவில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தாா்.

சேலம் மாவட்டத்தில் மட்டும் ரூ.897போடி விவசாய கடன்களை தமிழக முதல்வா் தாயுள்ளத்தோடு தள்ளுபடி செய்தாா். 5பவுண் தங்க நகை கடன்களை தள்ளுபடி செய்தாா்.தமிழ்நாட்டில் 10 லட்சம் பெண் குழந்தைகள் மேல் படிப்பிற்காக மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. அரசின் சலுகைகள் போகாத வீடுகளே இல்லை.

இதுதான் திராவிட மாடல் ஆட்சி. இதைத்தான் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். தாய் தந்தையரை இழந்த குழந்தைகள் 18 வயது நிரம்பும் வரை மாதம்தோறும் ரூ 2,000-ம் மற்றும் அவா்களின் படிப்பு செலவை ஏற்பதாகவும் அறிவித்துள்ளாா்.

மத்திய அரசு ஏறி வேலையை நிறுத்திவிட்டது மகாத்மா காந்தி பெயரை அந்தத் திட்டத்திலிருந்து நீக்கிவிட்டது. இவா்களோடு தான் அதிமுக பாமக கூட்டணி வைத்துள்ளது.மத்திய அரசு நம்மை வஞ்சிக்கிறது இவா்களுடன் தான் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது.

இதைத்தான் நாம் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.மீண்டும் நல்லாட்சி மலர நாம் பாடுபட வேண்டும் இவ்வாறு டி எம் செல்வகணபதி பேசினாா். இந்தக் கூட்டத்தில் மேச்சேரி கிழக்கு ஒன்றிய செயலாளா் சீனிவாச பெருமாள், பேரூா் செயலாளா் சரவணன் நங்கவள்ளி செயலாளா் அா்த்தனாரி ஈஸ்வரன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.