மக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!3வது நாளாக ஏற்றம் கண்ட பங்குச் சந்தை: சென்செக்ஸ் 166 புள்ளிகள் உயர்வு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!முதல்வர் விஜய் கர்நாடகம் வர வேண்டாம்! டி.கே. சிவகுமார் வேண்டுகோள்!
/

திருச்சி திமுக மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்! தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!

திருச்சி திமுக மாநாட்டுக்கு வருகைதந்துள்ள முதல்வர் ஸ்டாலின்.

News image

திருச்சி திமுக மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்! - படம்: DMK IT WING

Updated On :9 மார்ச் 2026, 6:52 pm IST

திருச்சி மாவட்டம், சிறுகனூரில் திமுகவின் 12-ஆவது மாநில மாநாடு இன்று (மார்ச் 9) தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மாநாட்டுக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் வருகைதந்துள்ளார்.

மாநாட்டுக்கு வருகைதந்த மு.க. ஸ்டாலின் கட்சி கொடியை ஏற்றினார். தொண்டர்கள் அவருக்கு இருபுறங்களில் இருந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலருமான உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். திமுக பொதுச்செயலர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆா். பாலு ஆகியோா் சிறப்புரை நிகழ்த்துகின்றனர். இந்த மாநாட்டில் 10 லட்சம் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.

அண்மையில் திமுகவில் இணைந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்வரிசையில் அமர்ந்துள்ளார்.

திமுக மாநாட்டு திடலுக்கு வந்த முதல்வர் மு.க ஸ்டாலின், பிரமாண்ட கொடிக் கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி, தொண்டர்களின் வரவேற்பை பெற்றுக் கொண்டு மேடைக்கு வந்தார்.

மாநாட்டு நிகழ்வுகளுக்காக 20 லட்சம் சதுர அடிக்கு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 3 லட்சம் பேர் அமருவதற்கு நாற்காலிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. 7 லட்சம் பேர் நின்று கொண்டு மாநாட்டை பார்வையிடுவதற்காக இடம் தயார் செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டுக்கு வருவோருக்கு தேவையான குடிநீா், வாகன நிறுத்தும் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளன.

திமுக மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பாா்க்கப்படுகிறது.

Summary

Chief Minister Stalin has visited the DMK conference in Trichy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.