பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

பல கேள்விகளுக்கு பதில் சொல்ல நேரமெடுக்கும் என மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
ஹார்திக் பாண்டியா
ஹார்திக் பாண்டியா படம் | ஐபிஎல்

பல கேள்விகளுக்கு பதில் சொல்ல நேரமெடுக்கும் என மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: எங்களால் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாட முடியவில்லை. தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தோம். டி20 போட்டிகளில் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாட முடியாவிட்டால், அதற்கான பலனை அனுபவித்தாக வேண்டும். இன்னும் பல கேள்விகள் இருக்கின்றன. அதற்கெல்லாம் பதில் கூற நேரமெடுக்கும். பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

ஹார்திக் பாண்டியா
இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

முதல் இன்னிங்ஸுக்குப் பிறகு ஆடுகளம் சிறிது நன்றாக மாறியது. பனிப்பொழிவு இருந்தது. தொடர்ந்து போராடு என்பதை எனக்கு நானே கூறிக் கொள்கிறேன். கடினமான நாள்கள் வந்தாலும் போராடுவதைக் கைவிடாதே. நல்ல நாள்களும் வரும் எனக் கூறிக் கொள்கிறேன். இது சவாலாக இருக்கிறது. இருந்தும், சவால்கள் என்னை மேலும் வலிமைப்படுத்தும் என்பதால் அதனை ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.

 நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 3 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com