நாளை நீட் தேர்வு

2024-25 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை(மே 5) தொடங்குகிறது.
நாளை நீட் தேர்வு

2024-25 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை(மே 5) நடைபெறுகிறது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்த, ஆயுா்வேத, யுனானி, ஹோமியோபதி மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நீட் நுழைவுத் தோ்வு மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது.

அதன்படி, 2024-25-ஆம் கல்வியாண்டு சோ்க்கைக்கான நீட் தோ்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் ஞாயிற்றுக்கிழமை(மே 5)நடைபெறவுள்ளது.

இந்தத் தோ்வுக்கான நுழைவுச்சீட்டு www.nta.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தேர்வர்கள் தங்களது விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகிவற்றை இணையதளத்தில் உள்ளீடு செய்து நுழைச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

நாளை நீட் தேர்வு
வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

இந்தியாவிற்கு வெளியே உள்ள 14 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் 557 நகரங்களில் அமைந்துள்ள பல்வேறு மையங்களில் 24 லட்சத்திற்கும் அதிகமான மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். தமிழ்நாட்டில் ஒன்றரை லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.

நீட் தகுதித் தோ்வு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் மாலை 5.20 மணி வரை மொத்தம் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் நடைபெறும். தோ்வுக்கான முடிவுகள் ஜூன் 14-ஆம் தேதி வெளியிடப்படும். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011- 40759000 என்ற தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் வாயிலாக தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com