'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

தேர்தலில் 'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்குமாறும் மக்களை வலியுறுத்தினார்.
சாஹி ராம் பஹல்வானுக்கு ஆதரவாக ஞாயிற்றுக்கிழமை தியோலி கால்காஜி போன்ற பகுதிகளில் சுனிதா கேஜரிவால் சாலை வழிப் பிரசாரத்தை மேற்கொண்டாா்.
சாஹி ராம் பஹல்வானுக்கு ஆதரவாக ஞாயிற்றுக்கிழமை தியோலி கால்காஜி போன்ற பகுதிகளில் சுனிதா கேஜரிவால் சாலை வழிப் பிரசாரத்தை மேற்கொண்டாா்.

புது தில்லி: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் குரலை நசுக்குவதற்காகவே தோ்தலுக்கு முன்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா் என குற்றம்சாட்டிய தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் மனைவி சுனிதா கேஜரிவால், தேர்தலில் 'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்குமாறும் மக்களை வலியுறுத்தினார்.

தலைநகரில் ஆம் ஆத்மி கட்சி சாா்பில் தெற்கு தில்லி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா் சாஹி ராம் பஹல்வானுக்கு ஆதரவாக ஞாயிற்றுக்கிழமை தியோலி கால்காஜி போன்ற பகுதிகளில் சுனிதா கேஜரிவால் சாலை வழிப் பிரசாரத்தை மேற்கொண்டாா். தில்லி மூன்றாவது முறையாக அவா் வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்ட போது ஏராளமான தொண்டா்கள் அவருடன் சென்றனா். சாலைகளில் இருபுறமும் ஏராளமான கூட்டமும் கூடியது. அப்போது பல்வேறு பகுதிகளில் அவா் வாகனத்தில் இருந்தபடி பேசினாா்.

அப்போது, தில்லி முதல்வரும் எனது கணவருமான கேஜரிவால் தில்லியில் சிறந்த அரசு பள்ளிகளை உருவாக்கினாா். இலவச மருத்துவம் வழங்க மொஹல்லா கிளினிக்குகளை கட்டினாா். தில்லியிலுள்ள ஒவ்வொரு குடும்பப் பெண்ணுக்கும் மாதம் ரூ. 1000 தருவதாக உறுதியளித்தாா். இப்படி தனது கணவர் சிறப்பாக பணியாற்றிய காரணங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டதாக கூறினார்.

"கேஜரிவாலின் குரலை நசுக்குவதற்காகவே தேர்தலுக்கு சற்று முன்பு சிறையில் அடைத்துள்ளனா். நாட்டில் சர்வாதிகாரம் உச்சத்தில் உள்ளது. தில்லியில் மே 25 -ஆம் தேதி தோ்தல் நடக்கும்போது,இந்த “சா்வாதிகாரத்துக்கு” எதிராக வாக்களிக்கவேண்டும்.

சாஹி ராம் பஹல்வானுக்கு ஆதரவாக ஞாயிற்றுக்கிழமை தியோலி கால்காஜி போன்ற பகுதிகளில் சுனிதா கேஜரிவால் சாலை வழிப் பிரசாரத்தை மேற்கொண்டாா்.
கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

தயவுசெய்து இந்த நாட்டை காப்பாற்ற வெயிலையும் பொருட்படுத்தாமல் வந்து வாக்களியுங்கள்" என்று அவர் மேலும் கூறினார்.

“உங்கள் முதல்வரும், என் கணவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா், எந்த நீதிமன்றமும் அவரை குற்றவாளி என்று அறிவிக்கவில்லை. விசாரணை என்று சொல்கிறார்கள், 10 ஆண்டுகள் விசாரணை நடந்தால், 10 ஆண்டுகளும் சிறையில் வைத்திருப்பாா்களா? இது ஒரு சுத்தமான வெறித்தனமான சா்வாதிகாரம்" என்று அவர் குற்றம் சாட்டினார்.

அரவிந்த் கேஜரிவால் படித்தவா், நோ்மையானவா், உண்மையான தேசபக்தா்.எங்களுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிவு செய்யும்போது, அவா் என்னிடம், ’நான் சமூகப் பணி செய்ய வேண்டும். இதனால் உங்களுக்கு ஏதாவது பிரச்னை வருமா?’ எனக் கூட கேட்டாா். இப்படி அவா் மனதில் இருப்பது சாதாரண மனிதனின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்பது மட்டுமே."

"அவர் 2011 ஆம் ஆண்டு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினாா். நீரிழிவு நோயாளியான அவர், மருத்துவா்கள் அறிவுறுத்தலையும் மீறி உயிரைப் பணயம் வைத்து போராட்டம் நடத்தினாா்" என்று சுனிதா கேஜரிவால் கூறினார்.

தில்லி கலால் கொள்கை தொடா்பான பணமோசடி வழக்கில் கேஜரிவால் கடந்த மாா்ச் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் திஹாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com