கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை
Updated on
1 min read

கேரளத்தில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மாணவர் ஒருவர் விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு கேரள மாவட்டத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் 3ஆண்டு பொறியியல் மாணவர் யோகேஸ்வர் நாத். மும்பையைச் சேர்ந்த இவர் அதிகாலை 5.30 மணியளவில் விடுதி கட்டடத்தின் 7வது மாடியில் இருந்து குறித்து தற்கொலை செய்துகொண்டார்.

உடனே மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் அவரை காப்பாற்ற முடியவில்லை. தற்கொலை செய்வதற்கு முன் மாணவர் அதுதொடர்பான குறுஞ்செய்தியை மாணவர் தனது வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.

மனஅழுத்தம் காரணமாக மாணவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. என்ஐடி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கேரளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com