
சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.90.28 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவையில் இருந்து புதுதில்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா உள்பட பல்வேறு நகரங்களுக்கும், ஷாா்ஜா, சிங்கப்பூா் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், சிங்கப்பூரில் இருந்து கோவை வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கவரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமான பயணிகளிடம் விமான நிலைய அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனா்.
அப்போது, பயணி ஒருவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் முன்னுக்கு பின் முரணான பதிலளித்ததால் அதிகாரிகள் அந்த பயணியைத் தனியாக அழைத்துச் சென்று அவரது உடமைகளை சோதனை செய்ததில் அவர் கொண்டு வந்த பையில் தங்க கட்டிகள் மற்றும் தங்க செயின் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த 1 கிலோ 220 கிராம் எடை கொண்ட 10 தங்க கட்டிகள் மற்றும் செயினை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.90 லட்சத்து 28 ஆயிரம் எனக் கூறப்படுகிறது. கடத்தலில் ஈடுபட்ட நபரிடம் அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.