திட்டக்குடி அருகே கார் டயர் வெடித்து கார் விபத்து: 3 பேர் பலி

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
Mother-son duo killed in road accident in Odisha
Mother-son duo killed in road accident in Odisha
Published on
Updated on
1 min read

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

தஞ்சாவூரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தஞ்சாவூரில் இருந்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக புதுச்சேரிக்கு காரில் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே எழுத்தூர் கிராமத்தில் வந்த போது காரின் டயர் வெடித்ததில், நிலை தடுமாறிய கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

Mother-son duo killed in road accident in Odisha
பிளஸ் 1 தேர்வு முடிவுகள் எப்போது? வெளியானது அறிவிப்பு

இதில், தஞ்சாவூரைச் சேர்ந்த காரில் பயணித்த பெண், சிறுமி உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

காயமடைந்த 5 பேர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் பலியான இருவரின் உடல்கள் உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து, பேலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com