திருமணம் எப்போது? - ராகுல் காந்தி பதில்

திருமணம் எப்போது? - ராகுல் காந்தி பதில்
படம் | பி டி ஐ
Published on
Updated on
1 min read

உத்தர பிரதேசத்தின் ரேபரேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தனது திருமணம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.

”ராகுல் காந்தியின் திருமணம் எப்போது?” என கூட்டத்தில் இருந்து பலத்த குரல்கள் எழும்பிய நிலையில், ”இப்போது, நான் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்று பதிலளித்துள்ளார் ராகுல்.

கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் கேட்ட கேள்வி ராகுலுக்கு சரியாக கேட்கவில்லை. அதன்பின் சுதாரித்துக் கொண்ட அவர், சிரித்துக்கொண்டே பதிலளித்துவிட்டு மேடையிலிருந்து நகர்ந்தார். இந்த காணொளி அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு ஜெய்ப்பூரின் மகாராணி கல்லூரியில் மாணவர்களுடன் உரையாடியபோது, தான் ’ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை’ என்பதை வெளிப்படுத்தினார் ராகுல் காந்தி. ”புத்திசாலியாகவும் அழகாகவும் இருந்தபோதிலும் திருமணத்தை ஏன் கருத்தில் கொள்ளவில்லை” என்று ஒரு மாணவர் கேட்டார். இதற்கு பதிலளித்த அவர், ’தனது பணிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும், தான் முழுமையான அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும், திருமணத்திற்கு இடமளிக்கவில்லை’ என்றும் கூறியிருந்தார்.

53 வயதாகும் ராகுல் காந்தி கேரளத்தில் வயநாட்டில் தற்போதைய எம்பியாக உள்ளார், ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த பாஜகவின் தினேஷ் பிரதாப் சிங்கை அவர் எதிர்கொள்கிறார். ரேபரேலி தொகுதியில் ஐந்தாவது கட்டமாக மே 20-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. 2019 மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 5,34,918 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரது நெருங்கிய போட்டியாளரான தினேஷ் பிரதாப் சிங் 3,67,740 வாக்குகளைப் பெற்று வலுவான சவாலை முன்வைத்தார்.

முன்னதாக வெள்ளிக்கிழமை, ராகுல் காந்தி அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் வெளியே வந்து தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார் "இன்று நான்காவது கட்ட வாக்குப்பதிவு! உங்கள் ஒரு வாக்கு உங்கள் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், உங்கள் முழு குடும்பத்தின் தலைவிதியையும் மாற்றும்.

ஒரு வாக்கு இளைஞர்களுக்கு வேலை உத்தரவாதம் முதல் ஏழை பெண்களின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் எனவே அதிக எண்ணிக்கையில் வந்து வாக்களிக்குமாறும் அவர் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவில் கூறியுள்ளார்.

ராகுல் காந்தி தனது வேட்புமனுவை தாக்கல் செய்த பிறகு ரேபரேலியில் நடைபெறும் முதல் பெரிய பேரணி இதுவாகும். அவரது சகோதரியும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி ரேபரேலியில் முகாமிட்டு அமேதி தொகுதியில் பிரசாரம் செய்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com