ஆந்திரத்தில் லாரி-பேருந்து மோதி கோர விபத்து: 6 பேர் பலி

ஆந்திரம் மாநிலம், பல்நாடு மாவட்டத்தில் தனியார் சொகுசு பேருந்தும் டிப்பர் லாரியும் மோதிக் கொண்டு தீப்பற்றி எரிந்த விபத்தில் உடல் கருகி 6 பேர் பலியாகினர்
பேருந்தும்-லாரியும் மோதிக்கொண்ட கோர விபத்தில் இரண்டு வாகனங்களும் முற்றிலும் எரிந்து  நாசமானது.
பேருந்தும்-லாரியும் மோதிக்கொண்ட கோர விபத்தில் இரண்டு வாகனங்களும் முற்றிலும் எரிந்து நாசமானது.

ஆந்திரம் மாநிலம், பல்நாடு மாவட்டத்தில் தனியார் சொகுசு பேருந்தும் டிப்பர் லாரியும் மோதிக் கொண்டு தீப்பற்றி எரிந்த விபத்தில் உடல் கருகி 6 பேர் பலியாகினர் என்று போலீசார் புதன்கிழமை தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் சிலகலுரிப்பேட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக குண்டூருக்கு அனுப்பி வைக்கப்பட்ட்டுள்ளனர்.

பேருந்தும்-லாரியும் மோதிக்கொண்ட கோர விபத்தில் இரண்டு வாகனங்களும் முற்றிலும் எரிந்து  நாசமானது.
கல்பாக்கம்: கார் விபத்தில் 5 இளைஞர்கள் பலி

இதுகுறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

“சொந்த ஊருக்கு சென்று திங்கள்கிழமை வாக்களித்துவிட்டு வேலை நிமித்தமாக பல்நாடு மாவட்டம் சின்னகஞ்சம் என்ற பகுதியில் இருந்து தனியார் சொகுசு பேருந்தில் ஹைதராபாத் நோக்கி வந்து கொண்டிருந்தவர்களின் பேருந்து, சிலக்கலூரிப்பேட்டை பகுதியில் லாரி மீது மோதி கோர விபத்துக்குள்ளானதில் இரண்டு வாகனங்களும் தீப்பற்றி எரிந்துது. இதில் லாரி ஓட்டுநர், பேருந்து ஓட்டுநர் மற்றும் நான்கு பேர் என 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்,” என்று சிலகலூரிப்பேட்டை கிராமப்புற காவல் நிலைய அதிகாரிகூறினார். இந்த விபத்தில் இரண்டு வாகனங்களும் முற்றிலும் எரிந்து நாசமானதாக போலீசார் தெரிவித்தனர்.

பேருந்தில் மொத்தம் 42 பேர் பயணம் செய்ததாக காயமடைந்தவர்கள் தெரிவித்தனர்.

விபத்தில் பலியானவர்கள் ஆந்திரத்தின் பாபட்லா மாவட்டத்தைச் சேர்ந்த அஞ்சி (35), உப்புகுண்டூர் காசி (65), உப்புகுண்டூர் லட்சுமி (55) மற்றும் முப்பராஜு கியாதி சைஸ்ரி (8) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்ற இருவரின் அடையாளங்களை காணும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com