தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

மழை நீரில் சிக்கிய பேருந்து: ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிவுறுத்தல்!

சுரங்கப்பாதைகள் மற்றும் தரைப்பாலங்களில் மழை நீர் தேங்கி இருந்தால் பேருந்துகளை மாற்றுப் பாதையில் இயக்க வேண்டும்

News image
Updated On :16 மே 2024, 7:14 am

சென்னை: சுரங்கப்பாதைகள் மற்றும் தரைப்பாலங்களில் மழை நீர் தேங்கி இருந்தால் பேருந்துகளை மாற்றுப் பாதையில் இயக்க வேண்டும் என ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் புதன்கிழமை பிற்பகலில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கோடை மழை கொட்டித்தீா்த்தது. இதனால், சாலைகளிலும், தெருக்களிலும் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. வள்ளியூா் பேருந்து நிலையம், அண்ணாநகா் உள்ளிட்ட பகுதிகளில் குளம்போல் தண்ணீா் தேங்கியது.

மேலும், வள்ளியூா்-திருச்செந்தூா் சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையிலும் மழைநீா் பெருமளவு தேங்கிய நிலையில், நாகா்கோவிலிலிருந்து திருச்செந்தூருக்குச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து அதில் சிக்கி நின்றது.

அதிலிருந்து 80 பயணிகளையும், பேருந்தையும் வள்ளியூா் தீயணைப்பு நிலைய அலுவலா் ராதாகிருஷ்ணன் தலைமையிலான வீரா்கள் மீட்டனா்.

இதுகுறித்த தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே ஓட்டுநர் சசிகுமாரை வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்து நாகர்கோவில் கோட்ட மேலாளர் மெர்லின் ஜெயந்தி உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், வள்ளியூர் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் அரசுப் பேருந்து சிக்கியதன் எதிரொலியாக, சுரங்கப்பாதைகள் மற்றும் தரைப்பாலங்களில் மழை நீர் தேங்கி இருந்தால் பேருந்துகளை மாற்றுப் பாதையில் இயக்க வேண்டும் என ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் தொலைதூர பேருந்துகளை காட்டாற்று ஓர சாலைகளில் இயக்கும்போது கவனத்துடன் இயக்க வேண்டும்.

பணிமனைகளில் மழைநீர் தேங்காத வகையில் வடிகால்கள் சரிவர இருக்கின்றனவா என சரிபார்க்க வேண்டும்.

பணிமனை மழைநீர் வடிகால் அமைப்புகளில் அடைப்புகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும்.

பேருந்துகளில் தண்ணீர் ஒழுகுவது, சாய்வு இருக்கைகள் சரிவர இயங்காதது போன்ற புகார்கள் வந்தால் ஓட்டுநர்கள் நடத்துநர்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.