யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

’முஸ்லிம்’ என்ற வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன் நீக்கியுள்ளது.
யெச்சூரி உரையில் 
’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன  வானொலி, தொலைக்காட்சி!
Published on
Updated on
1 min read

தொலைக்காட்சி மற்றும் வானொலி உரைகளிலிருந்து முஸ்லிம்கள் மற்றும் வகுப்புவாத சர்வாதிகாரம், கொடுங்கோல் சட்டங்கள் போன்ற சொற்களை நீக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறது தூர்தர்சன்.

மார்க்சிய கம்யூனிஸ்ட் பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி, பார்வர்ட் பிளாக் தலைவர் ஜி. தேவராஜன் ஆகியோர் அகில இந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சிக்காக ஆற்றிய உரைகளிலிருந்து ’முஸ்லிம்கள்’ மற்றும் ’வகுப்புவாதம்’ போன்ற வார்த்தைகளை நீக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

சீதாராம் யெச்சூரி, தனது தொலைக்காட்சி உரையில் இவ்விரண்டு சொற்களையும் நீக்கியதுடன், நிர்வாகத்தின் "திவால்நிலை" என்ற வார்த்தைக்குப் பதிலாக "தோல்வி" என்று மாற்றியிருக்கிறார்.

அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் தலைவர் ஜி. தேவராஜன் கொல்கத்தாவில் பதிவு செய்யப்பட்ட தனது உரையில், "முஸ்லிம்கள்" என்ற வார்த்தையைத் தவிர்க்குமாறு் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

இதுபற்றிக் கருத்துத் தெரிவித்த அதிகாரி ஒருவர், தூர்தர்சன் மற்றும் அகில இந்திய வானொலி இரண்டுமே இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ள ’நடத்தை விதிகளை’ப் பின்பற்றுவதாகக் கூறினார்.

”மற்ற நாடுகளை விமர்சிப்பது, மதங்கள் அல்லது சமூகங்கள் மீதான தாக்குதல், வன்முறையைத் தூண்டுவது அல்லது நீதிமன்ற அவமதிப்பு, நாட்டின் ஒற்றுமை, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதிக்கும் உரைகள் முதலானவற்றைத் தவிர்க்க வேண்டும்” என்று தேர்தல் விதிகளின் வழிகாட்டுதலின்படி தூர்தர்சன் பின்பற்றுவதாக தெரிவித்துள்ளது.

”தேவராஜன், முஸ்லிம்களுக்குப் பதிலாக 'குறிப்பிட்ட சமூகம்' என்ற சொற்றொடரைப் பயன்படுத்த வேண்டியிருந்தது.

நிர்வாகத்தின் 'திவால்' என்ற வார்த்தையை நீக்கி, அதற்குப் பதிலாக 'தோல்வி' என்று மாற்றுமாறு அறிவுறுத்தியது அரசாங்கத்தின் சர்வாதிகாரத் தன்மையையே ஆதரிக்கிறது" என்று சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.

பரிந்துரைக்கப்பட்ட நீக்குதல்களை மறுபரிசீலனை செய்யுமாறு தூர்தர்சன் இயக்குநருக்கு யெச்சூரி விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com