
நடுநிலையுடன் இருக்க வேண்டிய ஊடகங்கள் அவ்வாறு இல்லை. எனவேதான், பத்திரிகையாளர்கள் சந்திப்பு எதையும் நடத்தவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்குப் பேட்டியளித்த அவர், நாட்டின் பிரதமராகப் பதவியேற்று கடந்த பத்தாண்டு காலமும் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தாதது பற்றிக் கேட்டபோது மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
“பத்திரிகையாளர்கள் தங்களுடைய பார்வையையும் கொள்கைகளையும்தான் முன்னிறுத்துகிறார்கள்.
“நாடாளுமன்றத்துக்குத்தான் நான் பதிலளிக்க வேண்டியவன்.
“இன்று, பத்திரிகையாளர்கள் அவரவர் விருப்பங்களுடன் அடையாளம் காணப்படுகிறார்கள். இப்போதெல்லாம் ஊடகங்கள் பக்கச்சார்பு அற்றவையாக இல்லை.
“இப்போது மக்களுக்கு உங்களுடைய நம்பிக்கைகள் என்னவென்பது பற்றியும் தெரியும். முன்பெல்லாம் ஊடகம் முகமற்றவையாக இருந்தது. யார் எழுதுகிறார்கள்... அதன் கொள்கை என்ன.. யாரும் அதைப் பற்றி முன்னர் கவலைப்பட்டதில்லை. இனியும் நிலைமை அவ்வாறு இல்லை.
“அரசியலில் செயல்பாடுகள் பற்றிக் கவலைப்படாமல் ஊடகங்களைக் கையாள்வதை மையப்படுத்திச் செயல்படுகிற புதிய கலாசாரம் உருவாகியிருக்கிறது.
“இந்தப் பாதையில் செல்வதில் எனக்கு நம்பிக்கையில்லை. நானும் விஞ்ஞான் பவனில் ரிப்பன் வெட்டிப் புகைப்படம் எடுத்துக் கொள்ள முடியும். என்றாலும், ஜார்க்கண்டிலுள்ள ஒரு சிறிய மாவட்டத்தில் ஒரு சிறிய திட்டத்துக்காகச் செல்கிறேன்.
“புதியதொரு பணிக் கலாசாரத்தை நான் கொண்டுவந்திருக்கிறேன். அதை ஒப்புக்கொள்வதா, இல்லையா என்பதை ஊடகங்கள்தான் முடிவு செய்துகொள்ள வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.