எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்
எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.

பக்தர்கள் உணவு சாப்பிட்ட பிறகு அவர்கள் சாப்பிட்ட இலைகளில் நேர்த்திக் கடனுக்காக உருண்ட பக்தர்கள்.

பக்தர்கள் உணவு சாப்பிட்ட பிறகு அவர்கள் சாப்பிட்ட இலைகளில் நேர்த்திக் கடனுக்காக உருண்ட பக்தர்கள்.
கரூர்: கரூர் அருகேயுள்ள நெரூர் சதாசிவபிரமேந்திராள் கோயிலில் சனிக்கிழமை, எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.
கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது நெரூர் கிராமம். இங்கு புதுக்கோட்டை சமஸ்தானத்திற்குட்பட்ட சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு முக்தியடைந்த சதாசிவ பிரமேந்திராள் கோயிலும், சிவன் கோயிலும் உள்ளன.
சதாசிவ பிரம்மேந்திரர் இந்த கோயிலில் ஜீவசமாதி அடைந்ததன் நினைவு நாளையொட்டி ஆண்டுதோறும் மே 18 ஆம் தேதி பக்தர்கள் சாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம் செய்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். அதாவது பிரம்மேந்திரர் சுவாமிகள் சாப்பிட்ட இலையில் தாங்கள் உருண்டு அவரது ஆசீயை பெறுவதாக கருதி எச்சில் இலையில் பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்வது வழக்கம். மேலும் இந்த எச்சில் இலையில் அனைத்து சமுதாயத்தினரும் அங்கபிரதட்சணம் செய்வது இல்லை எனக்கூறி கடந்த 2014-இல் கரூரைச் சேர்ந்த ஒருவர் இந்த சடங்கிற்கு அனுமதி வழங்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிலையில்,கடந்த 10 ஆண்டுகளாக எச்சில் இலையில் உருண்டு அங்கபிரதட்சணம் செய்யும் சடங்கானது நடைபெறாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில்,கரூர் அடுத்த கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்த நவீன் குமார் 200 ஆண்டுகளாக நடைபெற்று வந்த புனித சடங்கினை உள்நோக்கத்தோடு நிறுத்திவிட்டனர். எனவே எங்களது அங்கபிரதட்சணம் செய்யும் சடங்கினை மீண்டும் நடத்திட உத்திரவிட வேண்டும் எனக் கூறி வழக்குத் தொடர்ந்த நிலையில், அந்த புனித சடங்கு நிகழ்ச்சியை நடத்திக் கொள்ளலாம் என வெள்ளிக்கிழமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது
இதையடுத்து சனிக்கிழமை பிற்பகல் நெரூர் அக்ரஹாரத்தில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது. பக்தர்கள் உணவு சாப்பிட்ட பிறகு அவர்கள் சாப்பிட்ட இலைகளில் பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக சதாசிவம் பிரம்மேந்திரர் கோயில் குழுவினர் சதாசிவம் பிரம்மேந்திரரின் புகைப்படம் அடங்கிய திருவுருவப் படத்தை சுமந்தவாறு பிரம்மேந்திரர் ஆலயத்திலிருந்து அங்கபிரதட்சணம் நடைபெறும் அக்ரஹாரத்திற்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர்.பின்னர் அங்கு நெய்வேத்தியம் உள்ளிட்ட சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து பிற்பகல் 2 மணி அளவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் உணவு சாப்பிட்ட பிறகு அவர்கள் சாப்பிட்ட இலைகளில் பக்தர்கள் நேர்த்திக் கடனுக்காக உருண்டனர்.
எச்சில் இலையில் உருள்பவர்கள் நினைத்த படி நடக்கும் என்பது ஐதீகம்.
இந்த நிகழ்ச்சியில் தமிழகம் மற்றும் கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...