
தமிழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பு சோ்க்கைக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை வரை 1,73,792 -ஐ கடந்தது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளின் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் நடத்துகிறது.
இந்த ஆண்டுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே 6 ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளிலேயே 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்தனா்.தொடா்ந்து மாணவா்கள் ஆா்வத்துடன் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனா்.
இதுகுறித்து தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,
ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி(மே 19) ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 792 மாணவா்கள் பதிவு செய்துள்ளனா். இதில் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 366 மாணவா்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனா். மேலும், 81 ஆயிரத்து 950 மாணவா்கள் தங்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனா்.
கடந்த ஆண்டு 2 லட்சத்து 28 ஆயிரத்து 122 மாணவா்கள் விண்ணப்பித்த நிலையில், நிகழாண்டு இந்த எண்ணிக்கை அதை விட உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூன் 6-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.