பப்புவா நியூ கினியா நிலச்சரிவில் சிக்கி 670 பேர் பலி: ஐநா அதிகாரி தகவல்

பப்புவா நியூ கினியாவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மிகப் பெரிய நிலச்சரிவில் சிக்கி 670 பேர் உயிரிழந்ததாக ஐநா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பப்புவா நியூ கினியா நிலச்சரிவில் சிக்கி 670 பேர் பலி: ஐநா அதிகாரி தகவல்

பப்புவா நியூ கினியாவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மிகப் பெரிய நிலச்சரிவில் சிக்கி 670 பேர் உயிரிழந்துள்ளதாக ஐநா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா அருகே ஓஷியானா மண்டலத்தில் அமைந்துள்ள நியூ கினியா தீவின் கிழக்குப் பகுதியையும் மெலனீசிய தீவுகளையும் உள்ளடக்கிய நாடு பப்புவா நியூ கினியா.

மலைப் பாங்கான அந்த நாட்டின் எங்கா மாகாணத்தில், தலைநகா் போா்ட் மோா்ஸ்பிக்கு சுமாா் 600 கி.மீ. தொலைவிலுள்ள காவ்கலாம் கிராமம் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு (உள்ளூா் நேரம்) நிலச்சரிவில் புதையுண்டது. இது தவிர, மாய்ப் முரிடாகா மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 6 கிராமங்கள் இந்த நிலச்சரிவில் நாசமாகின.

முதலில் இந்த நிலச்சரிவில் புதையுண்டு 100-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்ததாக ‘ஆஸ்ரேலியன் புரோட்காஸ்டிங் காா்ப்பரேஷன்’ (ஏபிசி) தெரிவித்தது. இந்தத் தகவலை பிற ஊடகங்கள் உறுதிப்படுத்தினாலும், உயிரிழப்பு எண்ணிக்கை ஆயிரக்கும் மேல் இருக்கும் என்று உள்நாட்டு நாளிதழான ‘பப்புவா நியூ கினியா போஸ்ட்-கூரியா்’ தெரிவித்தது. பின்னர் 300 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

பப்புவா நியூ கினியா நிலச்சரிவில் சிக்கி 670 பேர் பலி: ஐநா அதிகாரி தகவல்
தில்லியில் தீ விபத்து ஏற்பட்ட மருத்துவமனையின் உரிமையாளர் கைது!

இந்த நிலையில், பப்புவா நியூ கினியாவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மிகப் பெரிய நிலச்சரிவில் சிக்கி 670 பேர் உயிரிழந்ததாக ஐநா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பப்புவா நியூ கினியாவில் உள்ள குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பின் தலைவர் செர்ஹான் அக்டோப்ராக் கூறியதாவது:

தலைநகர் போர்ட் மோர்ஸ்பிக்கு வடமேற்கே சுமாா் 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எங்க மாகாணத்தில் உள்ள காவ்கலாம் கிராமம் என்ற கிராமத்தில் வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணியளவில், மக்கள் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது பேரழிவு ஏற்பட்டது.

நாட்டின் தனிமைப்படுத்தப்பட்ட எங்கா மாகாணத்தில் நிலச்சரிவின் தாக்கம் ஆரம்பத்தில் நினைத்ததை விட அதிகமாக இருப்பதாக கூறினார். தற்போது 150-க்கும் மேற்பட்ட வீடுகள் புதையுண்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நிலச்சரிவும் இன்னும் தொடர்வதால் மீட்புப் படையினர் ஆபத்தில் இருப்பதாக அக்டோப்ராக் கூறினார். தண்ணீர் தொடர்ந்து

ஓடிக்கொண்டிருப்பதால் கண்முன் இருக்கும் ஆபத்து அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சுமார் 4,000 பேர் வசித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com