பழநியில் ஆக. 24, 25-ல் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு!

பழநியில் ஆக. 24, 25-ல் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்படும் என்று அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பழநி முருகன்.
பழநி முருகன்.
Published on
Updated on
2 min read

பழநியில் ஆக. 24, 25-ல் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்படும் என்று அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநாட்டு நிகழ்வுகளை அறிந்து கொள்ளவும், பங்கேற்போர் பதிவு செய்திடவும், ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கவும் தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழநியில் 2024 ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்பும் பேராளர்கள்/ஆய்வு மாணவர்கள் பதிவு செய்திடும் வகையில் தனியாக வடிவமைக்கப்பட்டுள்ள இணையதளம் இன்று (28.05.2024) இந்து அறநிலையத்துறை ஆலோசனைக் குழு உறுப்பினர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 27.02.2024 அன்று நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் குழு கூட்டத்தில், தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் பெருமையை உலகெங்கும் உள்ள முருகபக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024ம் ஆண்டில் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது.

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கு உலகம் முழுவதும் உள்ள சமயப் பெரியோா்கள், ஆன்மிக அன்பா்கள், முருக பக்தா்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொள்வா் என எதிா்பாா்க்கப்படுவதால் விழா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தல், விளம்பரப் பணிகளை மேற்கொள்ளுதல், ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்தல், வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் முக்கிய பிரமுகா்களை வரவேற்று, அவா்களுக்கான வசதிகளை செய்து தருதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் வகையில் அமைச்சா் பி.கே. சேகா்பாபு தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலா்கள், ஆன்மிகப் பெரியோா்களைக் கொண்ட 20 உறுப்பினா்கள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது.

பழநி முருகன்.
ரேஷன் கடைகளில் மே மாதத்துக்கான பொருள்களை ஜூனில் பெறலாம்!

2024 ஆகஸ்ட் மாதம் 24 மற்றும் 25 தேதிகளில் பழநியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் அறுபடை வீடுகள் மற்றும் புகழ் பெற்ற முருகன் திருக்கோயில்களின் கண்காட்சி அரங்கு, ஆராய்ச்சிக் கட்டுரைகள் வாசிக்க ஆய்வரங்கம், மக்கள் அனைவரும் தாமே வழிபடும் வகையில் வேல்கோட்டம் முருகப்பெருமானின் பெருமைகளைப்

என பறைசாற்றும் வகையில் மாநாடு அமைக்கப்படுவதோடு, சமய பெரியோர்களின் உரைகள், ஆன்மிக சொற்பொழிவுகள், பக்தி இசை, பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளன. இம்மாநாட்டில் வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து 2,000- க்கும் மேற்பட்டோர் பங்கேற்பாளர்களாகவும், பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்களும் கலந்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பழநி முருகன்.
திருச்சி: செல்போன் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டம்!

இம்மாநாட்டின் நிறைவு நாளில் தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைகளை உலகறியும் வகையில் பறைசாற்றிய அடியார்கள், சமயப்பணி புரிந்தோர், சமய சொற்பொழிவாளர்கள், திருப்பணி மேற்கொண்டோர், ஆன்மிக மற்றும் இலக்கிய படைப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட உள்ளது.

அறநிலையத்துறை முத்தமிழ் முருகன் மாநாட்டில் பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் தங்கள் வருகையை பதிவு செய்வதற்கும், முருகப்பெருமானை கருப்பொருளாகக் கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கவும் https://muthamizhmuruganmaanadu2024.com/ என்ற தனி இணையதளம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com