புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருச்சி: செல்போன் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டம்!

திருச்சியில் செல்போன் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

News image
Updated On :28 மே 2024, 7:11 am

DIN

விவசாய விளைபொருள்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தருவதாக கூறிவிட்டு தராமல் ஏமாற்றியதை நிறைவேற்ற கோரியும், விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய கோரியும், கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற கோரியும், விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.5000 வழங்கக் கோரியும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் கர்நாடக அரசு மாதாமாதம் தண்ணீர் திறக்க உடனடியாக மத்திய அரசு உத்தரவிட கோரியும், மேகதாதுவில் அணை கட்ட கூடாது என்பதற்காகவும் போன்ற விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை 2014, 2019ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு நிறைவேற்றத்தை கண்டித்து திருச்சி மலைக்கோட்டை செல்போன் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

மேலும், விவசாயிகள் தில்லி சென்று போராட்ட நடத்த விடாமலும், உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட கூடாது என்று ரயில் பயணம் செய்ய கூடாது என்பதற்காக உறுதியான ரயில்வே பயணசீட்டை ரத்து செய்ததை கண்டித்தும் போராட்டம் நடத்தினர்.

Story image

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்ததாவது:

2000 கிலோமீட்டர் தொலைவில் இருந்து பிரதமர் மோடி வாரணாசி வந்து போட்டியிடலாம், 2000 கிலோமீட்டர் தொலைவில் இருந்து ராகுல்காந்தி கேரளத்தில் போட்டியிடலாம். ஆனால், தமிழக விவசாயிகள் வாரணாசி சென்று போட்டியிட்டால் விளம்பரதிற்காக என்று உச்ச நீதிமன்றம் கூறுவது எந்த வகையில் நியாயம் என்று தெரிவித்தனர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி மலைக்கோட்டை உச்சியில் ஏறி அங்குள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி முழக்கங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.