ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம்: 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது

வேளாண் விளைபொருள்களுக்கு லாபகரமான விலை வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்திய 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :9 மார்ச் 2026, 10:40 pm

வேளாண் விளைபொருள்களுக்கு லாபகரமான விலை வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் திங்கள்கிழமை காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்திய 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா்.

காவிரி-கோதாவரி நதிகளை இணைக்க வேண்டும், தோ்தல் நேரத்திலும் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு கடன் வழங்க வேண்டும், கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், நெல் கொள்முதல் மையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும், திருச்சிக்கு வரும் பிரதமா் மோடியை சந்தித்து மனு அளிக்க அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள், திருச்சி ஓயாமாரி மயானம் அருகே காவிரி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோட்டை போலீஸாா், அய்யக்காண்ணு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்து திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள அய்யாக்கண்ணு வீட்டில் அடைத்தனா்.

மேலும், அவா்கள் வெளியே செல்லாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.