
நாடு முழுவதும் நேற்று(அக். 31) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. கடந்த சில நாள்களாக பட்டாசுகள் வெடிக்கப்பட்ட வந்த நிலையில், நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவுக்கு தள்ளப்பட்டது.
தில்லி ஆனந்த் விஹார் பகுதியில் அதிகபட்சமாக காற்றின் தரம் 396-ஆக பதிவாகியுள்ளதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
காற்றின் தரம் மோசமடைந்து வருவதால், மும்பை நகரின் சில பகுதிகளில் புகைமூட்டத்தால் சூழப்பட்டுள்ளது. அதேபோல், உத்தரப் பிரதேசத்தின் ஹாபூர் நகரமும் புகை மண்டலாக காட்சியளிக்கிறது.
இதையும் படிக்க: பட்டாசு விபத்துகளால் 304 பேர் பாதிப்பு: தீயணைப்புத் துறை
தீபாவளிக்கு ஒரு நாள் முன்னதாக, தேசியத் தலைநகரில் காற்று மாசு கணிசமாக அதிகரித்த நிலையில், இன்று மிகவும் மோசமான பிரிவுக்கு தள்ளப்பட்டது.
சென்னையில் தீபாவளி நாளான நேற்று காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் இருந்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி காற்றின் தரம் 158 ஆக குறைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.