ஆத்தூர் அருகே கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பலி
ஆத்தூர் அருகே நண்பர்களோடு ஏறிப் பகுதிக்குச் சென்று புகைப்படம் எடுக்க முயன்ற கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வடக்கு காடு பகுதியில் அய்யனார் கோவில் ஏரி அமைந்துள்ளது. ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அய்யனார் கோவில் ஏரி நிரம்பி உள்ளது.
மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் சூரியமூர்த்தி மகன் திருச்சிற்றம்பலம் சிவா (18). இவர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார்.
இந்தநிலையில், நண்பர்கள் சபரீஷ்வரன், மனோஜ் ஆகியோருடன் வடக்கு காடு பகுதியில் அய்யனார் கோவில் ஏரியில் ஞாயிற்றுக்கிழமை திருச்சிற்றம்பலம் சிவா குளிக்கச் சென்றுள்ளார்.
இதையும் படிக்க | மாதம் ஒருமுறை மின் கணக்கீடு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்: தவெக
ஏரியின் நீர் பகுதியில் இறங்கி திருச்சிற்றம்பலம் சிவா புகைப்படம் எடுக்குமாறு நண்பர்களிடம் சொல்லி உள்ளார். அப்போது அதிக அளவில் ஆழம் இருந்ததால் திடீரென சிவா நீருக்குள் மூழ்கியுள்ளார்.
சிவாக்கு நீச்சல் தெரியாது எனக் கூறப்படும் நிலையில், அவா் ஆழமான பகுதியில் மூழ்கியுள்ளாா்.
நண்பா்கள் காப்பாற்ற முயன்றும் முடியாததால் அருகில் இருந்தவர்கள் ஆத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் தேடும் பணியில் ஈடுபட்டனா். சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின் கல்லூரி மாணவர் திருச்சிற்றம்பலம் சிவா உடலை சடலமாக மீட்டனர். உடலை கைப்பற்றிய ஆத்தூர் நகர போலீசார், உடற்கூறாய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.