மாதம் ஒருமுறை மின் கணக்கீடு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்: தவெக

தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கணக்கீடு செய்யும் முறையைக் கைவிட்டு, மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்
தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்
Published on
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கணக்கீடு செய்யும் முறையைக் கைவிட்டு, மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என தவெக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் அந்த கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு அண்மையில் நடைபெற்றது. அதில், கொள்கை திருவிழா என்னும் பெயரில் முக்கிய அறிவிப்புகளை அந்த கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை(நவ.3) நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 50-க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக அனைத்து பேரவைத் தொகுதிகளுக்கும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்வது தொடர்பாக செயற்குழுக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், பயணத்திட்டங்களை உருவாக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை(நவ.3) நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக பொய்களின் பட்டியலாக ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்ட திமுக, வழக்கம்போல அதனை காற்றில் பறக்க விட்டுவிட்டது.

மகளிர் உரிமைத் தொகை, பரிசுத் தொகுப்பு என்று ஒரு புறம் அறிவித்துவிட்டு, மறுபுறம் மதுக்கடைகளைத் திறந்து அதன் மூலம் அரசுக்கு வருவாயை பெருக்கி வருவது ஏற்புடையதல்ல.

சமூகக் குற்றங்கள், சமூகப் பாதுகாப்பின்மை அதிகரிப்பதற்கு முக்கியக் காரணமாக விளங்கும் மதுக்கடைகளைக் கால நிர்ணயம் செய்து மூட வேண்டும் என திமுக அரசை வலியுறுத்தியுள்ளது.

மேலும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை முன் கணக்கீடு செய்யும் முறையைக் கைவிட்டு மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறையை நடைமுறைப் படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com