ஓடிடி தளங்களில் வாரந்தோறும் திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகின்றன. இப்படங்களைப் பார்ப்பதற்கும் தனி ரசிகர்கள் உள்ளனர். ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் வெளியாகவுள்ள புதிய படங்கள் குறித்து மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான தேவரா படம் நாளை(நவ. 8) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது.
இதையும் படிக்க: நடிகர் பிரதீப் ஆண்டனி திருமணம்!
இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் படத்தை நாளை(நவ. 8) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணலாம்.
தெலுங்கு மொழிப் படமான பிரசன்ன வதனம் திரைப்படத்தை ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் காணலாம்.
ஜீவாவின் பிளாக், சதீஷ் நடிப்பில் வெளியான சட்டம் என் கையில் திரைப்படங்களை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.