
ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவான வா வாத்தியார் திரைப்படத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.
வா வாத்தியார் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகியுள்ளது.
நடிகர் நிவின் பாலி நடிப்பில் உருவான சர்வம் மாயா திரைப்படம் நாளை (ஜன. 30) ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது.
அகில் சத்யன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் அஜு வர்கீஸ், ரியா ஷிபு நடித்துள்ளனர்.
நகைச்சுவை பாணியில் எடுக்கப்பட்ட தெலுங்கு மொழிப்படம் பதங் (Patang). இந்தத் திரைப்படம் பட்டம் விடும் போட்டியை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படம் நாளை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இயக்குநர் பிரதீப் அத்வைதம் இயக்கத்தில் அனஸ்வரா ராஜன், ரோஷன் மேகா, முரளி சர்மா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் சாம்பியன்.
இந்தத் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் காணக் கிடைக்கிறது.
பூமி பெட்னெகர் திரில்லர் பாணியில் நடித்துள்ள இணையத் தொடர் தல்தல்.
தொடர் கொலையாளியைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் பெண் காவல் துறை அதிகாரியை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடர் நாளை அமேசான் பிரைமில் வெளியாகிறது.
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் நடிகர் புனித் ராஜ்குமார் நடிப்பில் வெளியான ‘45’ என்ற கன்னட மொழிப்படம் ஜீ5 தளத்தில் காணக் கிடைக்கிறது.
மேலும், இந்தப் படத்தில் உபேந்திரா மற்றும் ராஜ் பி ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நடிகை சோபிதா துலிபாலா பிரதான பாத்திரத்தில் நடித்த தெலுங்கு மொழிப்படமான சீக்காடி லோ திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
கிரைம் திரில்லர் பாணியில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் அருண் விஜய்யின் ரெட்ட தல திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
கிரிஸ் திருக்குமரன் இயக்கிய இப்படத்தில் நாயகிகளாக சித்தி இத்னானி, தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர்.
நடிகர் தனுஷ், க்ரித்தி சனோன் நடிப்பில் நேரடியாக ஹிந்தியில் உருவான தேரே இஷ்க் மெய்ன் திரைப்படத்தை ஆனந்த் எல். ராய் இயக்கியிருந்தார்.
இந்தத் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் காணக்கிடைக்கிறது.
இயக்குநர் விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் வெளியான திரைப்படம் மார்க்.
கிறிஸ்துமஸ் திருநாளையொட்டி அதிரடியான ஆக்சன் திரைப்படமாக வெளியான மார்க் திரைப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்கலாம்.
அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு, எல்.கே. அக்ஷய் குமார் நடிப்பில் திரைக்கு வந்த சிறை திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்தப் படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் காணலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.