
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ள நல்பூர் அருகே வாராந்திர சிறப்பு ரயில் தடம் புரண்டது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சுமார் 40 கிமீ தொலைவில் உள்ள நல்பூர் ரயில் நிலையம் வழியாகச் சென்று கொண்டிருந்த வாராந்திர சிறப்பு ரயிலான செகந்திராபாத்-ஷாலிமர் விரைவு ரயிலின் 3 பெட்டிகள் சனிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இதில் நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என தென்கிழக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் ஓம்பிரகாஷ் சரண் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு சாந்த்ராகாச்சி மற்றும் காரக்பூரில் இருந்து விபத்துக்கால நிவாரண ரயில் மற்றும் மருத்துவ நிவாரண ரயில்களும், பயணிகளை அவர்களது ஊர்களுக்கு அழைத்துச் செல்வதற்கு பேருந்துகளும் வரவழைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | கர்நாடக சாலை விபத்தில் 4 பேர் பலி!
விபத்து நிகழ்ந்த ரயில் பாதைகளில் சீரமைப்புப் பணிகளும் விரைந்து நடைபெற்று வருகின்றன என்றார்.
விபத்து காரணமாக சில விரைவு ரயில்கள் மற்றும் உள்ளூர் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது என தென்கிழக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் ஓம்பிரகாஷ் சரண் தெரிவித்தார்.
விபத்து தொடர்பான விவரங்களை அறிந்து கொள்வதற்காக கரக்பூரில் ஒரு உதவி எண்கள் (032229-3764) செயல்படத் தொடங்கியுள்ளது என்றார்.
மேலும் விபத்து குறித்து துறை ரீதியான விசாரணை தொடங்கப்படும் என்று சரண் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.