ஈஷா யோகா மையம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 23 இல் போராட்டம்: முத்தரசன் அறிவிப்பு

சொத்து வரி, மின்கட்டண வரியை உயர்த்த வேண்டும் என்று கூறியது மத்திய அரசு தான் என முத்தரசன் தெரிவித்தார்.
கோவையில் செய்தியாளர்களுடன் பேசிய  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் .
கோவையில் செய்தியாளர்களுடன் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் .
Published on
Updated on
2 min read

கோவை: கோவை ஈஷா யோகா மையத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் செயல்களை கண்டித்தும், ஈஷா நிறுவனர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வரும் 23 ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மகளிர் அணி சார்பில் போராட்டம் நடைபெறும் என அந்த கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார்.

கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் முத்தரசன் செய்தியாளர்களுடன் பேசினார்.

அப்போது, ஈஷா அறக்கட்டளை, யோகா என்கிற பெயரில் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது.இந்த யோகா மையத்தில் பெண்களுக்கு எதிரான பல்வேறு விதமான தவறுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. ஜக்கி வாசுதேவ் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது.பெண்கள் யோகா பயிற்சிக்காக சேர்க்கப்பட்டு மூளை சலவை செய்யப்படுகிறார்கள். குடும்பத்தினரையே அந்த பெண்கள் சந்திக்க மறுக்கிறார்கள். அண்மையில் லதா, கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகிய பெண்களுக்கு அங்கு மொட்டை அடிக்கப்படுகிறது.வாசுதேவ் மகள் திருமணம் செய்து வைத்துள்ளார்கள். ஆனால் ஊரார் வீட்டு மகள்கள் மொட்டை அடிக்கப்படுகிறார்கள்.இது குறித்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அங்கு ஆதிவாசிகள், பழங்குடியின மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு ஈஷா மையத்தில் சேர்க்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஈஷா யோகா மையத்திற்கு குடியரசுத் தலைவர், பிரதமர், பிற மாநில முதல்வர்கள், உயர் அரசு அதிகாரிகள் எல்லாம் வந்து செல்வதால் ஈஷா மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் தடுக்கப்படுகிறார்.

மேலும் யோகா மையத்தில் தகன மேடை இருப்பதற்கு என்ன அவசியம்?, இதற்கு அரசு அனுமதி உள்ளதா..?, ஈஷா யோகா மையம் நீர்வழி பாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகிறது. ஈஷாவிற்கு மட்டும் யார் அனுமதி கொடுத்தது?, வன நிலத்தை ஏழை மக்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தால் உடனே வெளியேற்றப்படுகிறார். ஈஷா மையம் மீது பொது விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். அங்குள்ள பெண் குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈஷா நிறுவனர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 23 ஆம் தேதி கோவை சிவானந்தா காலனி பகுதியில் பெரும் திரளான ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என தெரிவித்தார்.

மேலும் ஈஷா நிறுவனரை பாதுக்காப்பது மத்திய அரசு தான். மணிப்பூர் கலவரங்களை நேரில் சென்று பார்வையிடுவதற்கு நேரமில்லாத பிரதமர் மோடிக்கு ஈஷா மைய நிகழ்ச்சிகளுக்கு வந்து செல்வதற்கு நேரமிருக்கிறது. ஈஷாவிற்கும் எங்களுக்கும் பகை கிடையாது. அங்கு நடக்கும் செயல்களை தான் கண்டிக்கிறோம். ஆளுநர் ரவி பற்றி என்ன சொல்வது என தெரியவில்லை. சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இருக்க வேண்டிய அவர் ஆளுநராக இருக்கிறார். சொத்து வரி, மின்கட்டண வரியை உயர்த்த வேண்டும் என்று கூறியது மத்திய அரசு தான் என முத்தரசன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com