
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாளையொட்டி, புதுதில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் எம்பியும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று (நவ.19) மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதையும் படிக்க: 90% ஊழியர்களை பணிநீக்கம் செய்த சிஇஓ! காரணம் இதுதான்!!
இது தொடர்பாக, ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “தைரியம் மற்றும் அன்பு இரண்டிற்கும் பாட்டி ஒரு சிறந்த உதாரணம். தேச நலன்களுக்கான பாதையில் அச்சமின்றி நடப்பதே உண்மையான பலம் என்பதை அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன். அவருடைய நினைவுகள் எனக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக, கார்கே தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “இந்தியாவின் இரும்புப் பெண்மணி இந்திரா காந்தியின் வாழ்க்கையின் மூலம் கோடிக்கணக்கான இந்தியர்கள் புதிய உத்வேகம் பெறுவார்கள். இந்திரா காந்தி வாழ்நாள் முழுவதும் போராட்டம், ஆற்றல்மிக்க தலைமை, தைரியம் ஆகியவற்றுக்கு உதாரணமாக இருந்தார். அவர் நாட்டிற்காக தன்னலமின்றி உழைத்தார்.
இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் காக்க தன்னுடைய உயிரையும் தியாகம் செய்தார். அவரது பிறந்த நாளுக்கு எங்களது பணிவான அஞ்சலி.” என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.