90% ஊழியர்களை பணிநீக்கம் செய்த சிஇஓ! காரணம் இதுதான்!!

நிறுவனத்தில் பணிபுரிந்த 110 ஊழியர்களில் தற்போது 11 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

அமெரிக்க நிறுவனத்தைச் சேர்ந்த தலைமை செயல் அதிகாரி ஒருவர், தனது ஊழியர்களில் 90% பேரை அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளார்.

நிறுவனத்தில் பணிபுரிந்த 110 ஊழியர்களில் தற்போது 11 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.

நிறுவனத்தின் ஆலோசனைக் குழு கூட்டத்தில் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், அக்கூட்டத்தில் 11 பேர் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.

இதனால், ஆத்திரமடைந்த தலைமை செயல் அதிகாரி, 11 பேரைத் தவிர்த்து எஞ்சிய அனைவரையும் பணியிலிருந்து நீக்கி மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். இந்த மின்னஞ்சல் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

கடமை தவறேல்

அமெரிக்காவில் செயல்பட்டுவரும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பால்ட்வின், காலையில் ஆலோசனைக் குழு கூட்டத்திற்கு மின்னஞ்சலில் அழைப்பு விடுத்துள்ளார்.

முன்கூட்டியே இந்தக் கூட்டம் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் இந்தக் கூட்டத்தில் 11 பேர் மட்டுமே இணைய வாயிலாக பங்கேற்றுள்ளனர்.

110 ஊழியர்களைக் கொண்ட நிறுவனத்தில் 11 பேர் மட்டுமே பங்கேற்றதால், ஆத்திரமடைந்த தலைமை செயல் அதிகாரி, 99 பேருக்கும் பணிநீக்க கடிதத்தை அனுப்பியுள்ளார்.

இந்தக் கடிதத்தை பணிநீக்கம் பெற்ற ஒருவர் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த மின்னஞ்சல் கடிதம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

தலைமை செயல் அதிகாரி அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது,

''இன்று காலை ஆலோசனைக் குழு கூட்டத்தில் பங்கேற்காதவர்கள், இதனை அதிகாரப்பூர்வ நோட்டீஸாக கருதிக்கொள்ளுங்கள். நீங்கள் செய்வதாக ஒப்புக்கொண்ட விஷயத்தை செய்யத் தவறிவிட்டீர்கள். ஒப்பந்தப்படி உங்கள் பணியின் ஒரு பகுதியை செய்யத் தவறிவிட்டீர்கள். நீங்கள் கலந்துகொள்ள வேண்டிய கூட்டத்தில் பங்கெடுக்கத் தவறிவிட்டீர்கள்.

நமக்கு இடையிலான அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்கிறேன். நிறுவனத்துக்குச் சொந்தமானது ஏதாவது உங்களிடமிருந்தால், தயவு செய்து ஒப்படையுங்கள். நிறுவனத்திலிருந்து உங்கள் கணக்குகளை வெளியேற்றுங்கள்.

உங்கள் வாழ்க்கையை பிரகாசமாக்கிக்கொள்ள நான் வாய்ப்பளித்தேன். ஆனால், நீங்கள் அதனை தவறவிட்டீர்கள். 110 பேரில் 11 பேர் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றனர். அந்த 11 பேர் மட்டுமே வேலையில் தொடருவார்கள். எஞ்சிய அனைவரும் பணியிலிருந்து நீக்கப்படுகின்றனர்'' என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | ரயிலில் 'சிக்கன் ரைஸ்' சாப்பிட்ட வீராங்கனை திடீா் மரணம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com