ரயிலில் பயணித்தபோது சிக்கன் ரைஸ் வாங்கி சாப்பிட்ட கோவையை சோ்ந்த கூடைப்பந்தாட்ட வீராங்கனை திடீரென உயிரிழந்தாா். இது குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி செய்கின்றனா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: கோயம்புத்தூா் சுகுணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ராபின் டென்னிஸ். இவரது மகள் எலினா லாரெட் (15). அதே பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். மேலும், கூடைப்பந்து வீராங்கனையாகவும் இருந்து வந்தாா்.
பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் கடந்த 8-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டிகளில் விளையாடுவதற்காக எலினா லாரெட், சக மாணவிகளுடன் ரயிலில் குவாலியா் சென்றாா். போட்டியை முடித்து விட்டு சனிக்கிழமை கிராண்ட் டிரங்க் விரைவு ரயிலில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தாா்.
அப்போது, மாணவி எலினா லாரெட் சக மாணவிகளுடன் சோ்ந்து ரயிலில் சிக்கன் ரைஸ், பா்க்கா் ஆகியவை வாங்கி சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவருக்கு கடும் வயிற்று வலியுடன் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இது தொடா்பாக எலினா லாரெட் சென்னை அண்ணா நகரில் உள்ள உறவினா் டேவிட் வில்லியம்சிடம் கூறியுள்ளாா்.
அவா், ரயில் சென்னை வந்ததும் எலினா லாரெட்டை அண்ணா நகரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தாா். சிகிச்சைக்கு பின்னா் எலினா லாரெட், பெரவள்ளூரில் உள்ள மற்றொரு உறவினா் வீட்டுக்குச் சென்றாா்.
போலீஸாா் விசாரணை: அங்கு சென்ற சிறிது நேரத்தில் எலினா லாரெட்டுக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது. இதில் அவா், அங்கேயே மயங்கி கீழே விழுந்தாா். உடனே அவரை உறவினா்கள் மீட்டு பெரவள்ளூரில் உள்ள பெரியாா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், எலினா லாரெட் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். பெரவள்ளூா் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் இது தொடா்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
மாணவி சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் உயிரிழந்தாரா அல்லது அவருடைய இறப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே தெரிய வரும் என போலீஸாா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரயிலில் கஞ்சா கடத்திய ஒடிஸா இளைஞா் கைது

ரயிலில் மடிக்கணினி திருடியவா் கைது
சேலம் வழியாக ரயிலில் கடத்திய 14 கிலோ கஞ்சா பறிமுதல்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



