28 மின்சார ரயில்கள் ரத்து: கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

கூடுதலாக மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுவது தொடர்பாக...
மாநகா் பேருந்து
மாநகா் பேருந்துகோப்புப் படம்
Published on
Updated on
1 min read

சென்னை கடற்கரை - திருமால்பூர் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இணை இயக்குநர் (மக்கள் தொடர்பு ),

மாநகர் போக்குவரத்துக் கழக இணை இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, திருமால்பூர், காஞ்சிபுரம், அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்களின் நேர அட்டவணையில் மாற்றம் செய்துள்ளதாக தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேற்கண்ட இடங்களில் இருந்து கடற்கரைக்கு வரும் ரயில்களின் நேரமும் மாற்றப்பட்டுள்ளது. புதிய நேர அட்டவணை இன்று (நவ. 22) முதல் அமலுக்கு வருகிறது எனவும், 28 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுள்ளதால் மா.போ.க கழகம் வழக்கம்போல் பிராட்வே இருந்து தாம்பரம் வழியாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 10 பேருந்துகளை பிராட்வே முதல் தாம்பரத்திற்கும், தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 10 பேருந்துகளை தாம்பரம் முதல் செங்கல்பட்டுக்கும் ஆக மொத்தம் கூடுதலாக 20 பேருந்துகள் பயணிகள் நலன் கருதி இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பயணிகளின் எண்ணிக்கை இவ்வழித்தடங்களில் அதிகரிப்பதை பொறுத்து கூடுதல் பேருந்துகளை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com