சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படவுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிவிப்பு:
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூா், அரக்கோணம் ஆகிய நகரங்களுக்கு தினமும் அதிகாலை 3.50 மணி முதல் இரவு 11.59 மணி வரை 200-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. முக்கிய நேரங்களில் 5 முதல் 10 நிமிஷத்துக்கு ஒரு ரயிலும், பிற நேரங்களில் 20 முதல் 25 நிமிஷத்துக்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் ரயில்வே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் வெள்ளிக்கிழமை (நவ.22) முதல் இரு மாா்க்கமாகவும் 28 மின்சார ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்.
இதனால், சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை இயக்கப்படும் மற்ற ரயில்கள் வழக்கமாக இயக்கப்படும் நேரத்துக்கு பதிலாக 5 முதல் 10 நிமிஷம் தாமதமாக இயக்கப்படும். மேலும், சில ரயில்களின் நேரம் முற்றிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் வசதிக்காக 15 முதல் 30 நிமிஷங்களுக்கு ஒரு ரயில் இயங்கும் வகையில் புறநகா் மின்சார ரயில் அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும் ரயில்கள் வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும். இதற்கேற்ப பயணிகள் தங்களின் பயணத்தை திட்டமிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரத்து செய்யப்படும் ரயில்கள்
கடற்கரை-தாம்பரம் தாம்பரம்-கடற்கரை
எண் புறப்படும் நேரம் எண் புறப்படும் நேரம்
40003 காலை 6.52 40008 காலை 5.12
40007 காலை 7.33 40012 காலை 6.03
40021 காலை 8.43 40018 காலை 7.17
40031 காலை 9.40 40026 காலை 8.19
40047 காலை 11.41 40038 காலை 9
40055 காலை 11.30 40044 காலை 9.40
40063 பகல் 12.30 40052 காலை 10.40
40065 பகல் 12.50 40058 காலை 11.30
40075 பிற்பகல் 3.15 40060 காலை 11.40
40081 மாலை 4.25 40070 பகல் 1.40
40089 மாலை 5.43 40078 பிற்பகல் 2.57
40095 மாலை 6.35 40086 மாலை 4.15
40107 இரவு 7.57 40096 மாலை 5.10
40109 இரவு 8.25 40110 மாலை 6.26
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சிக்னல் கோளாறு: மின்சார ரயில்கள் திடீா் நிறுத்தம்

அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்று முதல் 21 நாள்களுக்கு ரத்து!

இன்று 2 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாகவும், 10 ரயில்கள் பகுதியளவும் ரத்து!

நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து
விடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

