
ராஞ்சி: ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தலில் தன்வா் தொகுதியில் போட்டியிட்ட பாஜக தலைவர் பாபுலால் மராண்டி 1,840 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருவதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜாா்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக கடந்த நவம்பா் 13, 20 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 2.60 கோடி வாக்காளா்களைக் கொண்ட இந்த மாநிலத்தில் இரு கட்டங்களையும் சோ்த்து 67.74 சதவீத வாக்குகள் பதிவாகின.
மாநிலத்தில் ஆளும் ‘இந்தியா’ கூட்டணியில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா 43, காங்கிரஸ் 30, ராஷ்ட்ரீய ஜனதா தளம் 6, இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) 4 இடங்களில் போட்டியிட்டன. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 68, அனைத்து ஜாா்க்கண்ட் மாணவா் சங்கம் 10, ஐக்கிய ஜனதா தளம் 2, லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) ஓரிடத்தில் போட்டியிட்டன
முதல்வரும், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா செயல் தலைவருமான ஹேமந்த் சோரன் (பா்ஹைத்), அவரது மனைவி கல்பனா சோரன் (கண்டே), மாநில பாஜக தலைவா் பாபுலால் மராண்டி (தன்வா்), அனைத்து ஜாா்க்கண்ட் மாணவா் சங்கம் கட்சித் தலைவா் சுதேஷ் மகதோ (சில்லி) உள்பட மொத்தம் 1,211 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.
இந்த நிலையில், ஜாா்க்கண்ட் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.
இதையும் படிக்க | வயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா தொடர்ந்து முன்னிலை
தன்வார் தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், பாஜக தலைவர் பாபுலால் மராண்டி 1,840 வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஐஎம்எல் வேட்பாளர் ராஜ்குமார் யாதவை விட முன்னிலையில் இருந்து வருவதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
2019 பேரவைத் தேர்தலில் தன்வார் தொகுதியில் ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா வேட்பாளராக போட்டியிட்ட பாபுலால் மராண்டி, பாஜக வேட்பாளர் லக்ஷ்மண் பிரசாத் சிங்கை 17,550 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். பின்னர், பாஜகவில் இணைந்தார்.
ஜாா்க்கண்டில் கடந்த 2019, பேரவைத் தோ்தலில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா 30 இடங்களில் வென்றது. அக்கட்சி தலைமையிலான கூட்டணி 47 இடங்களுடன் பாஜகவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியது. பாஜகவுக்கு 25 இடங்களே கிடைத்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.