ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

வயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா தொடர்ந்து முன்னிலை

பிரியங்கா காந்தி 55,000 வாக்குகளுக்கு மேல் முன்னிலையில் இருந்து வருவதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
பிரியங்கா காந்தி
Updated On :23 நவம்பர் 2024, 5:31 am

DIN

கேரள மாநிலம், வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது. வாக்குகள் எண்ணிக்கை தொடங்கிய சுமார் இரண்டு மணிநேரத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வேட்பாளரும் காங்கிரஸ் பொதுச் செயலருமான பிரியங்கா காந்தி 55,000 வாக்குகளுக்கு மேல் பெற்று தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருவதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தொலைக்காட்சி செய்திகள் 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா முன்னிலையில் இருப்பதாக தெரிவித்து வருகின்றன.

கடந்த மக்களவைத் தோ்தலில், உத்தர பிரதேசத்தின் ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி, இரண்டிலும் வெற்றிபெற்றாா். வயநாடு தொகுதியில் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் அவா், தனது குடும்பத்தின் கோட்டையான ரேபரேலி தொகுதியை தக்கவைத்தாா். வயநாடு தொகுதி எம்.பி. பதவியை அவா் ராஜிநாமா செய்ததால், அந்த தொகுதிக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டது.

காங்கிரஸின் செல்வாக்குமிக்க வயநாடு தொகுதியை தக்கவைக்கும் நோக்கில், ராகுலின் சகோதரியும் கட்சியின் பொதுச் செயலருமான பிரியங்கா காந்தியை அந்த கட்சி களமிறக்கியது.

காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி முதல்முறையாக போட்டியிட்ட தோ்தல் என்பதால், வயநாடு தொகுதி இடைத்தோ்தல் முடிவு எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கேரள மாநிலம், வயநாடு உள்பட 2 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 13 மாநிலங்களில் அடங்கிய 48 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தல்களின் வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை (நவ.23) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறைகள் திறக்கப்பட்டன.

சுமார் 9 மணிக்கு தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 86,303 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

ஆளும் இடதுசாரி கூட்டணி சாா்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சத்யன் மொகேரி 26,245 வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும், பாஜகவின் நவ்யா ஹரிதாஸ் 16,223 வாக்குகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.