துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் தேர்தல்: முன்னிலை நிலவரம்

கேரள மாநிலம், வயநாடு உள்பட 2 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 13 மாநிலங்களில் அடங்கிய 48 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தல்களின் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

News image
வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள்
Updated On :23 நவம்பர் 2024, 5:10 am

DIN

கேரள மாநிலம், வயநாடு உள்பட 2 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 13 மாநிலங்களில் அடங்கிய 48 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தல்களின் வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை (நவ.23) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதலில் வாக்கு எண்ணும் மையங்களில் அதிகாரிகள் தபால் வாக்குகளை சரிபார்த்து எண்ணத் தொடங்கினர், அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி முன்னிலை நிலவரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி முதல்முறையாக போட்டியிட்ட தோ்தல் என்பதால், வயநாடு தொகுதி இடைத்தோ்தல் முடிவு எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு பேரவைத் தொகுதியிலும் குறைந்தபட்சம் 20 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

மகாராஷ்டிரம்:

மொத்த தொகுதிகள் - 288 பெரும்பான்மைக்கு - 145

பாஜக+ 216

காங்கிரஸ்+ 60

மற்றவை+ 12

ஜார்க்கண்ட்:

மொத்த தொகுதிகள் - 81

பெரும்பான்மைக்கு - 41

இந்தியா கூட்டணி+ 48

பாஜக+ 30

மற்றவை: 2

கேரளா: வயநாடு இடைத் தேர்தல்- காங்கிரஸ் முன்னிலை

காங்கிரஸ் - 1,43,346

சிபிஐ - 36,000

பாஜக - 21,442

மற்றவை - 121

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.