2026 பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும்: அமைச்சர் செந்தில்பாலாஜி

2026 பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி
தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி
Published on
Updated on
1 min read

கோவை: 2026 பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

திமுக சட்டத்துறை மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட திமுக வழக்குரைஞர் அணி ஆலோசனைக் கூட்டம், திமுக சட்டத்துறை மூத்த வழக்குரைஞர் என்ஆர்.இளங்கோ தலைமையில் நடைபெற்றது. திமுக சட்டத்துறை இணைச்செயலாளர் கேஎம். தண்டபாணி வரவேற்புரையாற்றினார்.

தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மறைந்த மூத்த வழக்குரைஞர் ஏ.கே.ராஜேந்திரன் திருவுருவ படத்தை திறந்து வைத்து தலைமை உரையாற்றினார்.

அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது:

உள்ளாட்சி தேர்தலில் ஆரம்பம் முதல், தேர்தல் முடியும் வரை இரவு பகல் பாராமல் உழைத்த சட்டத்துறையினருக்கும், அனைத்து வழக்குரைஞர்களுக்கும் நன்றி. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் ஆரம்பத்திலிருந்தே அனைத்து பணிகளையும் பார்ப்பது வழக்குரைஞர்கள். வாக்கு சேகரிப்பது முதல் வாக்கு சான்றை கையில் பெறும் வரை வழக்குரைறிஞர்களின் பணி சிறப்பானது.

மறைந்த ஏ.கே. ராஜேந்திரன் கட்சிக்காக ஆற்றிய பணிகளை பாராட்டிய செந்தில்பாலாஜி, அவருக்கு வீர வணக்கத்தை செலுத்துவதாக தெரிவித்தார். மாவட்ட கழகம் சார்பில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மாவட்ட செயலாளர்கள் தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் 80 சதவிகித வழக்குகள் முடிவடைந்துள்ளது. மீதம் உள்ள வழக்குகள் விரைவில் முடிக்கப்படும் என கூறினார்.

மேலும் வரும் 2026 பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும். திமுகவின் இரும்பு கோட்டையாக கோவை மாற வேண்டும். அந்த அளவிற்கு நமது பணிகள் சிறப்பாக இருக்க வேண்டும். வழக்குரைஞர்களுடன் இணைந்து மாவட்ட நிர்வாகமும் சேர்ந்து பணியாற்றி கோவையின் 10 தொகுதிகளையும் வெற்றெடுத்தோம் என்ற பெருமையை அடைய வேண்டும். அதற்கான வெற்றி பயணத்தை இப்போதே தொடங்க வேண்டும் என்று செந்தில்பாலாஜி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com