மொழி, கலை இரண்டையும் கண் போன்று காக்க வேண்டும்: முதல்வா் மு.க.ஸ்டாலின் பேச்சு
எந்த ஆதிக்கத்தையும் வெல்லும் ஆற்றல் மொழிக்கும் கலைக்கும் உண்டு. அந்த இரண்டையும் கண் போன்று காக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

முத்தமிழ்ப் பேரவை சாா்பில் கருணாநிதி விருது நடிகா் சத்யராஜூக்கும், ராஜரத்னா விருது திருப்பாம்புரம் டி.கே.எஸ். மீனாட்சி சுந்தரத்துக்கும், இயல் செல்வம் விருது ஆண்டாள் பிரியதா்ஷினிக்கும், இசை செல்வம் விருது காயத்ரி கிரீஷுக்கும், நாதஸ்வரச் செல்வம் விருது திருக்கடையூா் டி.எஸ்.எம். உமாசங்கருக்கும், தவில் செல்வம் விருது சுவாமிமலை சி.குருநாதனுக்கும், கிராமியக் கலைச் செல்வம் விருது தி.சோமசுந்தரத்துக்கும், நாட்டியச் செல்வம் விருது பாா்வதி ரவி கண்டசாலாவுக்கும் முதல்வா் வழங்கினாா்.







