சென்னை, புறநகரில்  5 நாள்களுக்கு பலத்த மழை!

சென்னை, புறநகரில் 5 நாள்களுக்கு பலத்த மழை!

இன்று முதல் டிச. 1 வரை பலத்த மழைக்கு வாய்ப்பு.
Published on

சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் 5 நாள்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

மழை நிலவரங்களை வெளியிட்டு வரும் தமிழ்நாடு வெதர்மென் என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளதாவது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 1-2 மணி நேரங்களில் மழை தொடங்கவுள்ளது. மழையானது அடுத்த 4-5 நாள்களுக்கு நீடிக்கும்.

டெல்டா(நாகை, மயிலாடுதுறை, காரைக்கால், தஞ்சாவூர்) மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று அதி கனமழையை எதிர்பார்க்கலாம். கடலூர், புதுவையிலும் கனமழை பெய்யும்.

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இலங்கைக்கு கீழே உள்ளது. இது வடக்கு நோக்கி நகர ஆரம்பித்துள்ளது.

மிகவும் மெதுவாக நகரத் தொடங்கியுள்ளதால், கடலோர மாவட்டங்களான சென்னை மற்றும் அதன் புறநகரில் இன்றிலிருந்து 4-5 நாள்களுக்கு, டிசம்பர் 1 வரை மழை நீடிக்கும்.

சென்னையில் நவ. 27 ஆம் தேதியில் இருந்து மிக கனமழை பெய்யத் தொடங்கவுள்ளது. தாழ்வு மண்டலமானது சென்னைக்கு கிழே கரையை கடக்கும்போது, வடதமிழகத்தில் நல்ல மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையை நோக்கி மழை மேகக் கூட்டங்கள் நெருங்கி வந்துக்கொண்டிருப்பதால் சென்னை மற்றும் புறநகரில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com