ரிசா்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் உடல்நிலை தொடர்பாக, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நெஞ்செரிச்சல் காரணமாக, இந்திய ரிசா்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கும் சக்திகாந்த தாஸ், தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க: விரைவில் வருகிறது க்யூஆர் கோடு கொண்ட பான் அட்டை! பெறுவது எப்படி?
அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ரிசா்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நலமுடன் இருக்கிறார். அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார். அவர் விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” தெரிவிக்கப்பட்டுள்ளது.