6 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்!

செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அதி கனமழை எச்சரிக்கை.
Rain
மழை (கோப்புப்படம்)DIN
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களுக்கு நாளை(நவ. 29) அதி கனமழை பெய்வதற்கான சிவப்பு எச்சரிக்கையை (ரெட் அலர்ட்) சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ள ஆழ்த்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்றிரவு புயலாக வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு, மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி, தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகர்ந்து, நவ. 30 ஆம் தேதி காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவ.30-ல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு அதிகன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com