மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

காந்தி மண்டப வளாகத்தில் மது பாட்டில்களா? ஆளுநர் ரவி வருத்தம்!

தூய்மைப் பணியை மாதத்தில் ஒரு முறையாவது கடைபிடிக்க வேண்டும்

News image

தூய்மைப் பணியில் ஈடுபட்ட ஆளுநர் ஆர்.என். ரவி. - படம்: ஆளுநர் மாளிகை

Updated On :1 அக்டோபர் 2024, 12:08 pm IST

காந்தி மண்டப வளாகத்தில் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து, தூய்மைப் பணியில் ஈடுபட்டபோது, மது பாட்டில்களைக் கண்டது தனக்கு வருத்தமளிப்பதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களுடன் ஆளுநர் ரவி, சென்னை காந்தி மண்டபத்தில் தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் வெகுஜன தூய்மை இயக்கத்தில் பங்கேற்றார்.தொடர்ந்து, தன்னார்வலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுடன் கலந்துரையாடினார்.

ஆளுநர் ரவி வருத்தம்

அப்போது செய்தியாளர்களை சந்தித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:

”மகாத்மா காந்தி சுதந்திரப் போராட்ட தியாகி மட்டுமல்ல, அவர் தூய்மையை வலியுறுத்திய தலைவர். தூய்மைப்படுத்துதல் என்பது கடவுளுக்கு நாம் செய்யும் சேவைக்கு சமம்.

தூய்மைப்படுத்துதலை ஒரு பழக்கமாக நாம் மாற்ற வேண்டும். தூய்மைப் பணியை மாதத்தில் ஒரு முறையாவது கடைபிடிக்க வேண்டும் என்று பல பல்கலைக்கழகங்களில் வலியுறுத்தியுள்ளேன்.

காந்தி மண்டப வளாகத்தில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தபோது சில மது பாட்டில்களையும் பார்த்தேன், இது காந்தியுடைய கொள்கைகளுக்கு எதிரானது, இந்த செயல் எனக்கு வருத்தம் அளிக்கிறது” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.