
விஜய் 69 படத்தில் நடிக்கவுள்ள சக நடிகர்கள் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
மேலும், கோட் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அக். 3 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள கடைசி திரைப்படத்தில் நடிக்கவுள்ள கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு இன்று(அக். 1) முதல் அக். 3 வரை வெளியாகும் என்று படக்குழு விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.
படிக்க | விஜய்க்கு வில்லனாக பாபி தியோல்?
2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகுமென படக்குழு முன்னதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.
கேவிஎன் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.